Featured Post Today
print this page
Latest Post

இலங்கையர்கள் கனடிய விஸா பெறுவதற்கு புதிய விதி முறைகள்!

கனடா விஸா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்த வருடக் கடைசியிலிருந்து சில புதிய நிபந்தனைகளை(Biometrics Requirements) பூர்த்தி செய்வது அவசியமாகும். அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் அப்பேனியா, அல்ஜீரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எரித்திரியா, லிபியா, நைஜீரியா, சவூதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சூடான், துனூசியா என்பன உட்பட மேலும் சில நாடுகளாகும்.

இந்த புதிய நிபந்தனைகளின்படி, ஒருவர் தனது விரல் அடையாளங்கள், புகைப்படங்கள் என்பனவற்றை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான
செலவாக மேலதிகமாக 85 கனடிய டொலர்களையும் செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கனடாவுக்குள் வந்துள்ளதை பின்னர் கனடிய அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். அதன்
காரணமாகவே இந்தப் புதிய விதிமுறைகளின் மூலம் கனடாவின் குடியேற்ற முறைமையைப் பாதுகாக்க முடியும் என கனடிய அரசு கருதுகிறது.

விருந்தினர்கள், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மாணவர்கள் என கனடிய விஸாவுக்கு விண்ணப்பித்துள்ள 3 இலட்சம் பேரில் 20 வீதத்தினர் இந்த விதிமுறை அமுல் செய்யப்பட்ட முதல் வருடத்தில் தமது சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குழந்தைகள், வயோதிபர்கள், இராஜதந்திரிகள் போன்றோருக்கு இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

0 comments

மகனை முதலமைச்சராக்கும் பிரதமர் தி. மு. ஜயரத்னவின் கனவுக் கோட்டை தகர்ந்தது.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஆளுங்கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரான பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவியோ வேறு அமைச்சர் பதவியோ வழங்கப்படவில்லை. அதே போல வட மேல் மாகாண சபையில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜொகான் பெர்ணாண்டோவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அதேவேளை, வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்க தான் மாகாண சபையில் பதவி எதையும் கோரவில்லை என்று கூறியுள்ளார்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாச பிரதமராக இருக்கும் போது கூறினார் ஜனாதிபதி நிர்வாக முறையில் பிரதமர் பதவி பியோன் பதவிக்குச் சமமானது என்று. அது உண்மைதான். பாவம் இன்றைய பிரதமர் தி.மு.ஜ.

0 comments

இராணுவம் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கம்பகா வெலிவேரியாவில் தொழிற்சாலையொன்றின் கழிவு நீரால் குடிநீர் மாசடைந்தமைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தது தெரிந்ததே. அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு இராணுவ கட்டளைத் தளபதி லெப். ஜென. தயா ரட்னாயக்காவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு குறித்த வெலிவேரியா ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடானது இராணுவம் தனது சட்டபூர்வமான கடமைக்கு அப்பால்செயல்பட்டுள்ளதாகக் கண்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள சாட்சியங்களை நெறிப்படுத்த வருவதாக அறியப்படுகின்றது.
0 comments

சம்பந்தர் சொல்றார் நாங்கள் என்ன செய்வது.. சித்தார்தனின் ஆதங்கம்.

வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிபிசி வானொலியின் தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியில் ...

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இந்த இணைப்பில் அழுத்தி கேட்கலாம்.

நன்றி பிபிசி
0 comments

ஆனந்தராஜாவுக்கு நிம்மதி அடைக்கலநாதனுக்கு தலையிடி

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித் துறை நகர சபையில் ததேகூ-வைச் சேர்ந்த ந. ஆனந்தராஜுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு கிடைத்தது. கட்சியின் நியமப்படி அதிகூடிய விருப்பு வாக்குபெற்ற ஆனந்தராஜூக்கே நகரசபைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவதாக வந்த முன்னொரு காலம் அதன் தலைவராக இருந்த மாஜி எம்பியான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைவர் பதவி தனக்கே வேண்டும் என்று அடம் பிடித்து தலைவருக்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுத்து நகர சபையை ஒழுங்காக இயங்கவிடாது குழப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வட மாகாண சபைத் தேர்தல் வந்தது. வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவி வேண்டும் கொல்லைப் புறத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்த அவர் வட மாகாண சபையில் போட்டியிட்டார். ஆனந்தராஜும் வல்லை மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் சனியன் தொலைந்ததென்று.

ஆனால், அந்தச் சனியன் இப்பொழுது ரெலோ தலைவர் அடைக்கலநாதனைப் பிடித்துக் கொண்டது. வட மாகாண சபையில் ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக வன்னி மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கட்சியோ அந்த அமைச்சுப் பதவியை பதவிப் பித்தரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது. இதனால் மனமுடைந்த கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தீர்மானதுக்கு கட்டுப்பட்டாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்பதால் தனது தலைமைப் பதவியைத் தூக்கி எறியத் தீர்மானித்து விட்டார். நிச்சயமாக சிவாஜி இந்தப் பதவியையும் எட்டிப் பிடித்துவிடுவார்.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் தனக்கு சுகாதார அமைச்சை தரவேண்டும் என்று வேறு கேட்கிறாராம்

அடைக்கலநாதன் ரெலோவே அடைக்கலம் என்று இருந்தவர். சிவாஜியோ ஓடுகாலியாக கட்சியை விட்டோடி புதுக் கட்சி ஆரம்பித்து அது சந்தைப் படாததால் ஊதாரிப் பிள்ளைபோல திரும்பி வந்தவர்.

தங்கத்துரை, குட்டிமணி மற்றும் ஶ்ரீ சபாரட்னம் போன்ற எண்ணற்ற தியாகிகளின் ஆவிகள் இவரைப் போன்றவர்களைச் சும்மாவிடாது.
0 comments

தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி அறிவித்தல்! ரணில் நிராகரிப்பு!

தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு கோரி ஐக்கிய பிட்சுக்களின் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறிய வேளை, அதனை நிராகரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

பிட்சுக்கள் முன்னணியின் பிரதான நிறைவேற்றுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பிட்சுக்கள் 12 பேருக்கும் ஐதேக தலைவருக்குமிடையே இன்று (04) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரணில் விக்கரமசிங்க அவ்வாறு குறிப்பிட்டார் என தேசிய பிட்சுக்களின் முன்னணியைச் சேர்ந்த உலுபனே சுமங்கள தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஐக்கிய பிட்சுக்களின் முன்னணயின் கண்டி மாவட்ட செயலாளர் தல்பொத்த தம்மஜோதி தேரர், சிங்கள ஊடகமொன்றுக்கு விசேட செவ்வியொன்றை வழங்கிவிட்டுக் குறிப்பிடும்போது, வழக்கறிஞர் சிரால் லக்திலக்க, வழக்கறிஞர் மைத்திரி குணரத்ன என்போரின் தலைமையிலேயே இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்திற்கு முழு அநுசரணையையும் வழங்குவதாக ஐக்கிய பிட்சுக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை மாற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் வீதி ஊர்வலம் நாளை (05) காலை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)
0 comments

இன்றும்கூட ஜனநாயகம் பிறக்கவில்லை... பிறப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது...! - வாசு

சிங்கள இலக்கியத்தில், கவிதையியலில், சிறுகதையியலில் அதைப்போல சிங்கள சினிமாவில் மிகவும் கவலைக்கிடமான கதைகள் உள்ளடங்கியுள்ளன என்றும், அவற்றிலிருந்து வெளிவருகின்ற அவற்றிலிருந்து தெளிவுறுத்தப்படுகின்ற உணர்வுகள் சிங்கள சமூகத்தில் நன்கு பிரபல்யம் பெற்றவை என்றும், சிங்கள சமூகத்திலிருக்கின்ற இந்த உணர்வுகளை பொதுபல சேனாவிற்கோ ராவண பலயவிற்கோ அந்த பலயவிற்கோ இந்த பலயவிற்கோ குழப்பிவிட முடியாது என்றும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

பன்னூலாசிரியர் எம்.சீ. ரஸ்மினின் ‘ போர்க்கால சிங்கள இலக்கியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு 10 இல் அமைந்துள்ள இலங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, அந்நிகழ்வின் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:

நாங்கள் சிங்களத்திலும் எழுதுகிறோம். தமிழிழும் எழுதுகின்றோம். தமிழ் பேசும் மக்கள் தமிழை வாசிக்கிறார்கள். சிங்களவர்கள் சிங்களத்தை வாசிக்கிறார்கள். எங்கள் எழுத்தாளர் சங்கம் என்னைச் சந்தித்து, ‘நாங்கள் தற்போது சிங்களத்தில் எழுதுவதை தமிழிற்கும், தமிழில் எழுதுவதை சிங்களத்திற்கும் மொழி பெயர்க்க வேண்டும்’ என்று சொன்னார்கள். அதற்காக நாங்கள் நிதியம் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்கு எங்கள் அமைச்சு உதவுகின்றது. நாங்கள் சிங்கள, தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து வடக்கிற்குச் சென்று அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் சென்றோம். அவர்களை அங்கு சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக உரையாடினோம். நானும் சகல ஒன்றுகூடல்களிலும் கலந்து கொண்டேன்.

இன்று நாங்கள் ஜனநாயக சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தேவைப்பாட்டில் உள்ளோம். ஜனநாயக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஒருவகை களைப்பையை இன்று நாங்கள் காண்கிறோம். இன்று இன்னும் ஜனநாயகம் பிறக்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது.... ஆயினும் இன்னும் பிறந்தபாடில்லை. தற்போது நாங்கள் அதற்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். போரின் அழிவு தொடர்பான அனுபவம் ஒருவகையில் தகுதியாக இருக்கின்றது.

தற்போது மூளை தெளிவாகியுள்ளது. இவ்வளவு மனிதர்களை கொன்றொழித்து, இவ்வளவு உடைமைகளை அழித்தொழித்து எதனைக் கண்டோம் என்று இப்பொழுது சிந்திக்கிறார்கள். இனியாவது நாங்கள் ஜனநாயக சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவோம். இலங்கையை ஒருமைப்படுத்துவோம். இலங்கை ஒருமைப்படுத்தப்படாதவிடத்து ஒருபோதும் இலங்கை எந்த புதுமையை (ஆச்சர்யத்தையும்) நோக்கியும் நகர முடியாது. இலங்கையில் ஒருமை மலர்வது ஆச்சர்யத்துக்கான அத்திவாரமாகும். அதனால் இலங்கையை ஒருமைப்படுத்த இலங்கையின் சகல இடங்களிலிருந்தும் ஆவன செய்ய வேண்டும். இலங்கியக் கலை அவற்றில் பிரதான அங்கம் வகிக்கும் என்று உறுதியாக நான் கூறுகின்றேன்... என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)
0 comments

பிரபாகரனின் நிலக்கீழ் மாளிகை வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

வடகிழக்கின் இளைஞர்களை வெடிகுண்டுகளை கட்டி போர் முனைக்கு அனுப்பி விட்டு புதுக்குடியிருப்பில் நிலக்கீழ் மாளிகை ஒன்றைக்கட்டி தனது மனைவி மக்கள் உற்றார் உறவினருடன் சுகபோகம் அனுபவித்து வந்தார் பிரபாகரன். இவரது இந்த நிலக்கீழ் மாளிகை இராணுவத்தினரின் கையில் வீழ்ந்தது. இந்த மாளிகையை மக்கள் கடந்த காலத்தில் சென்று பார்வையிட்டும் வந்தனர்.

இந்த மாளிகை இன்று இராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் தடயங்களை அழிக்கும் நோக்குடன் புலிகளுக்கு சொந்தமான பல்வேறு தடயங்கள் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டமை யாவரும் அறிந்தது.

ஆனாலும் குறித்த பிரதேசத்தில் கன்னிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவேறாது பிரபாகரனின் மாளிகைக்கு குண்டு வைத்து தகர்க்குமிடத்து அக்கன்னிவெடிகள் அதிர்சியினால் வெடிக்கும் என்ற காரணத்தினால் இதுவரை காலமும் இச்செயற்பாடு தாமதமாக இருந்தாக அறியக்கிடைக்கின்றது.
0 comments

வறிய மாணவர் விடுதிக்கு அழுக்குத் தண்ணீர்

மிகவும் வறிய நிலையில் பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து வந்து மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் அழுக்கடைந்த நீரைப் பருகி பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கல்வித் திணைக்களத்திடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை சுகவீனம் காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலை மாணவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

விடுதியில் உள்ள மாணவர்கள் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாக ம் கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதே இதற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
0 comments

மேர்வினோபதேசம்

கோபத்தை மனதில் வைத்து போக்கிரித்தனம் செய்யும் ஊடகவியலாளர்களிடம் அன்பு செலுத்துகிறேன். அவர்கள் திருந்த சந்தர்ப்பம் வழங்குகிறேன். திருத்த முடியாத ஊடகவியலாளர்களை பன்சலைகளுக்கு அழைப்பித்து பிக்குகள் மூலம் தர்ம உபதேசம் நடத்த போகிறேன். வத்தளை கொங்கிதொடை பிரதேசத்தில் 2 ம் திகதி நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

நியாமான மற்றும் நடுநிலையான் செய்திகளை வெ ளியிடும் இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களுக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 comments

தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமைகளுக்கு ஓர் அவசர அவசிய வேண்டுகோள்;....

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் அக் கூட்டமைப்பிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நான்கு கட்சிகளுக்கும் கட்சிக்கொரு அமைச்சுப்பதவி வழங்குங்கள் என்று தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் செய்கின்றோம். மக்களாகிய நாம் கட்சிகளின்கொள்கைகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை மாறாக தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியாக எமது உரிமையை வென்றெடுக்க அபிவிருத்தி, உதவிகள் போன்ற அனைத்து சேவைகளையும் மறந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம். அதன் பிரதிபலனாக வடமாகாண சபை மூன்றில் இரண்டுக்கு மேலாக வெற்றி பெற்றுள்ள இந்ந சந்தர்ப்பத்தில் மாகாணஅரசையும், தமிழர்களின் உரிமைப்போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நான்கு கட்சிகளுகம் தலா ஒரு அமைச்சு என வழங்கி கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பலப்படுத்துவீர்கள் என நம்புகினறோம்.


தலைவர்களே! மக்கள்களாகிய நாங்கள் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் செயல்ப்பட்டுள்ளோம் . உங்கள் செயற்பாட்டையும் அப்படியே எதிர்பார்த்து..... கையொப்பமிட்டு அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்காக மக்களாகிய நாம் மனம் வருந்துகின்றோம்.


நன்றி

இவ்வண்ணம்.
தமிழ்த் தேசிய கூட்டமைபிற்கு வாக்களித்த மக்கள்

3 comments

உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க என்ன உணவுகள் சாப்பிடலாம்!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்த்தால் நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் பசியையும் தூண்டும் தன்மை கொண்டது விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்
1 comments

கள்ளக்கா தலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியவருக்கு விளக்கமறியல்!

கள்­ளக்­கா­த­லியை தாக்கி, நிர்­வாண கோலத்தில் புகைப்­ப­ட­மெ­டுத்து, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான் ஏ.எம்.என்.பி.அம­ர­சிங்க எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

நீர்­கொ­ழும்பு லுனு­கட சந்­தியில் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான 26 வய­து­டைய ஒருவரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ராவார். சந்­தேக நபர் தளு­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 35 வயது­டைய திரு­ம­ண­மான பெண்­ணுடன் கடந்த ஐந்து
வருட கால­மாக இர­க­சிய தொடர்பு கொண்டு வந்­துள்ளார். வழக்கின் முறைப்­பாட்­டா­ள­ரான குறித்த பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் தொழில் செய்து வரு­வ­தாக ஆரம்­ப­ கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்ளது.

இதே­வேளை, முறைப்­பாட்­டா­ள­ருக்கு வேறு சில­ருடன் இர­க­சிய தொடர்பு இருப்­ப­தாக சந்­தேக நப­ருக்கு தெரிய வந்­துள்­ளது. இதனை அடுத்து தொலை­பேசிக் கட்­டணம் செலுத்­த­வென முறைப்­பாட்­டா­ளரை சந்­தேக நபர் அழைத்துச் சென்று தனது கடையின் களஞ்­சி­ய­சா­லையில் வைத்து அவரை தாக்­கி­யுள்­ள­துடன் நிர்வாணக் கோலத்தில் அவரைப் புகைப்­படம் எடுத்­ததுடன் பின்னர் நிர்­வாணப் படத்தை இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

இது தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட பெண் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ததையடுத்து பொலிஸார் சந்­தேக நபரை கைது செய்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
0 comments

இத்தாலி படகு விபத்தில் இறப்பு எண்ணிக்கை 300 ஆக உயரும்!

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடிபுக விரும்புகிறவர்கள் இத்தாலி கடல் வழியாக அங்கு பயணம் மேற்கொள்கின்றனர் இதில் அதிகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமை, உள்நாட்டு சண்டை காரணமாக மக்கள் திருட்டுத்தனமாக குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள 'லாம்பெடுசா' கடல் பகுதியூடாக சட்டவிரோதமாக குடிபுக படகில் பயணம் மேற்கொண்ட 500 பேர் சென்று கொண்டிருந்த படகு திடீரென படகு கவிழந்ததில் படகில் இருந்த 500 பேரும் கடல் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பதாக அறிந்த இத்தாலி கடல் மீட்புக்குழுவினர் அங்கு தேடுதல் வேட்டையை தொடங்கி இதுவரை 140 பேரை காப்பாற்றியுள்ளதுடன் நீரில் மூழ்கி இறந்தவர்கள் 82 பேரின் உடல்களை வெளியே எடுத்துள்ளனர்

இன்னும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கியிருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது படகு விபத்து ஏற்படுவதற்கு முன்பு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது இந்த வாரம் தொடக்கத்தில் சிசிலி தீவு அருகே இதுபோன்று சட்டவிரோதமாக குடிபுக முயன்றோரின் படகு கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments

சீனாவால் கடன் எடுப்போம்....! இந்தியாவுக்கு அதைக் கொடுப்போம்....!

அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டுள்ள கியுபாவின் இராணுவ வீர்ர்கள் ஐவரையும் எங்களது இராணுவ வீர்ர்கள் எனக் கருதி, அவர்களை விடுதலை செய்வதற்காகச் செய்யும் யுத்தமும், எங்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் யுத்தமும இரு வேறானவையல்ல, ஒரே யுத்த்த்தின் அத்தியாவசிய பிரிவாக நினைத்துச் செயற்படுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நிர்மாண பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீவன்சவினால் இலங்கையரைச் சந்தித்து தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கையிலுள்ள பொலிவேரிய சகோதரத்துவ அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘அமெரிக்கப் பலவந்தமும் கியுபாவின் 5 எடுத்துக்காட்டுக்களும்’ எனும் தலைப்பில், அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் சிறைவைக்கப்பட்டுள்ள கியுப நாட்டைச் சேர்ந்த ஐவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கையிலுள்ள கியுபத் தூதுவர் திருமதி இந்திரா லோஜேஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் விசேட உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச,


‘பெலிவேரியா சகோதரத்துவ அமைப்பு இன்று செய்துகொண்டிருப்பது சர்வதேச ரீதியாக இந்நாட்டுப் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பாரிய கடமைக்கும் பொறுப்புக்கும் உரம் சேர்க்கும் விடயமாகும். இலங்கையில் எங்களுக்கு சர்வதேசத்தின் பொறுப்புக்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்காது. அதற்குக் காரணம் கியுபாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்களைப் போன்று அவர்கள் முகங்கொடுத்தது போன்று இல்லாவிட்டாலும் மற்றொருமுறையில் கியுபாவை விடவும் அதிகமாக உலக பலம்மிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கைகளுக்குள் சிக்குண்டுண்டு கிடந்தமையாகும். அதற்கு எதிராக இலங்கையர்களான எங்களுக்குள் எழுகின்ற உணர்வுகள் கியுபா நாட்டினரின் உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு உதவுகின்றன.

கியுபா கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும் தைரியத்துடன் அழியாத பெருநம்பிக்கையுடன் தங்களது இருப்பையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காதிருப்பதனாலேயே நாங்கள் கியுபா மீது அன்பு செலுத்துகிறோம். அதுமட்டுமன்றி, அந்நாடு கியுபாப் பொதுமக்களின் நம்பிக்கையையும், அன்பையும், கௌரவத்தையும் நாளுக்கு நாள் பெற்று உலகுக்கு மாபெரும் முன்மாதிரியைக் காட்டிவருகின்றது.

பலம்மிக்க அரசுகளின் தீமைகளுக்குக் கட்டுப்பட்டு கால்மடித்திருப்பது அழகியல் காட்சியாக மாறியுள்ள யுகத்தில், பலம்மிக்க அரசாங்கங்களின் அநியாயங்கள், கெட்ட விடயங்களுக்கு சோரம் போயுள்ள உலகில் கியுபாவிடமுள்ள சக்தியானது மிகப் பலம்பொருந்தியது. பாரிய பலத்திற்கு எடுத்துக்காட்டு. எனவேதான் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரானவர்களின் பெருவரவேற்பு அதற்குக் கிடைக்கிறது.

கியுபா மக்கள் கியுபாவின் கம்பியூனிஸ்ட் கட்சியுடன் மேற்கொண்டுவரும் பிரச்சினையானது கியுபாவுக்கு மட்டும் விசேடத் தன்மை வாய்ந்த பிரயத்தனம் அல்ல. கியுபா மக்கள் தேர்ந்தெடுத்த சமூக, பொருளாதார திட்டம் தொடர்பாக நாங்கள் ஒருவருக்கொருவர் உடன்பாட்டுடனும் உடன்பாடில்லாமலும் இருந்தாலும் நாங்கள அனைவரும் உடன்படும் ஒரு பொதுவான விடயம் இருக்கின்றது. அதுதான், கியுபா மக்களுக்கு சுயாதீன இனங்களுக்கு உள்ள உரிமையை தட்டிப் பறிக்க எந்தவொரு பலம் வாய்ந்த இனத்திற்கும் பலம் வாய்ந்தவர்களுக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது.

(நீளும்...)
(தமிழில்: கலைமகன் பைரூஸ்)
0 comments

சர்வதேச தரபுகைப்படத்துடன் இனி இலங்கை கடவுச்சீட்டு!

2014 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும் எனவும் இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியுமென இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
0 comments

வடக்குத் தமிழரும் கிழக்கு முஸ்லிம்களும் இணைந்து தமீழீழத்தைக் கட்டியெழுப்ப முயல்கிறார்கள்....?

சந்தர்ப்பவாத அரசியலாளர்கள் இறந்தவர்களின் நெற்றிகளில் பொறிக்கப்பட்ட அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்கே முயற்சிசெய்கிறார்கள் என தேசிய சுதந்தர முன்னணி குறிப்பிடுகிறது.

அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு நகராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் அவர்களினால் இவ்வாறு குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு:

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது. அது மிகப் பாரதூரமான காரியம் என்று குறிப்பிடுகின்றது தேசிய சுதந்திர முன்னணி. 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் என்பன பிரிவினைவாதத்திற்கு வழிகாட்டக்கூடியன என்பதே தேசிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போது வடக்கு கிழக்கில் உள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் கூட பிரிவினைவாதத்தை போஷிப்பவை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் 13 இனை உள்ளது உள்ளவாறே செயற்படுத்தற்கு கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வெற்றிகண்டுள்ள பிரேரணையானது பயங்கரமானதாகும். நாங்கள் இதற்கு முன்னரும் பலமுறை சுட்டிக் காட்டியது என்னவென்றால், வடக்கு கிழக்கினை மீண்டும் ஒன்றிணைப்பதானது மீண்டும் ஈனியா வுடனான தமிழ் அரசு மற்றும் முஸ்லிம் அரசுத் துண்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிவகுப்பதாகும். பிரிவினைவாதத்துடனான யுத்தத்தை தோல்வியடையச் செய்து, பெற்றுக் கொண்டுள்ள வெற்றியை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கவிடாது, அவர்கள் அனைவரையும் மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளும் முயற்சியாகும்.

உண்மையில் உருவாக்க முயற்சிப்பது தமிழ் முஸ்லிம் துண்டங்கள் ஒன்றிணைந்த ஒரு அரசாங்கம். அது துயரத்தில் வாடும் தமிழனினதோ முஸ்லிமினதோ அரசாங்கம் அல்ல. அவர்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்கும் அரசாங்கம் அல்ல. பிற ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கு உருவாக்கப்படுகின்ற, இறந்தவர்களின் நெற்றிகளில் எழுதப்படுகின்ற, பழக்கப்பட்ட துயரங்களுக்குப் பதிலாக பாரிய துன்பங்களை ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமாகும்.


அந்த துயர்மிக்க அரசாங்கத்திற்கு அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் இனவாத அரசியல் சார்ந்த அரசியலாளர்கள் பற்றி ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணி எதிர்வுகூறியுள்ளது. வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பலமாக உரிமைகளைப் பெற்றுக் கொள்வதா? இல்லாவிட்டால், சின்னஞ் சிறு வேலிக்கம்பங்களுக்கிடையே நின்று கொண்டு பிற எதிர்பார்ப்புக்களுடன் பலியாகி கொன்றொழிக்கும் பூமியை இலக்காகக் கொள்வதா? என மக்கள் கட்டாயம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதை தெளிவுறுத்துகிறோம்.

இதனை அரசியல் சட்டத்தின் மூலம் தர்க்க ரீதியான சட்டங்களின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது. தற்போதைய சூழ்நிலை, வரலாறு, எதிர்காலம் அனைத்தையும் எடுத்துநோக்கினால்தான் இதுபற்றிய தெளிவைப் பெறலாம், முடிவெடுக்கலாம். அந்த முடிவைச் சரிவர எடுக்காதவிடத்து, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும். அவர்களின் தலைவர்களாகக் காட்சிகொடுக்கின்ற இந்த சந்தர்ப்பவாதிகள் பற்றி எங்களுக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால், கோழிப்பண்ணையொன்றுக்குப் பொறுப்பாக வெளி எல்லையில் நிற்கின்ற நரிகள் அந்த கோழிப்பண்ணையின் உரிமையைப் பெறுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும்.

நியாயமற்ற அரசியல் திட்டமொன்றுடன் தங்களது சூழ்ச்சிக்குள் சிக்கவைக்க முயல்கின்ற இந்த பிரிவினைவாதிகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி ஆச்சரியப்படுவதில்லை. அத்துடன், அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு எதிரியாக நின்று யோசனைகளை முன்வைக்கின்ற இவர்கள் பற்றி எங்களுக்கு வெறுப்பு மட்டுந்தான் உண்டு. அரசியலுக்காக என்றும் பிரிவினைவாதிகளுடன் நின்றுகொண்டு, இலங்கையரின் வாக்குகளால் அன்றி மேற்கத்தேயவரின் வாக்குகளால் பலத்தை பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி விடயத்தில் எங்களுக்கு அநுதாபமே ஏற்படுகின்றது. குறித்த பிரேரணைக்காக வாக்களித்த ஆட்சியாளர்கள் விடயத்திலும் நாங்கள் சற்றுக் கவலையுறுகிறோம். மாகாண சபை தொடர்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் கூடக் கருத்திற் கொள்ளாமல், அதனால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றிச் சிந்திக்காது அவர்கள் எடுத்த முடிவானது பிரிவினைவாதத்திற்கு எதிரான தங்களது தலைமைத்துவத்தையும், அரசையும் நிலைகுலையச் செய்வதாகும்.

எது எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு இரு மாகாணங்களிலும் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அனைத்தையும் மீண்டும் அநாதையில்லங்களில், காப்பகங்களில் இட்டுச் செல்லும் இந்த ‘தனியரசு’ நாடகம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி ஆவன செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி எதிர்பார்க்கிறது என்பதை கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

(கலைமகன் பைரூஸ்)
0 comments

உணர்ச்சிக் கவிஞருக்கோர் உணர்வு பூர்வமான கடிதம்

அன்பான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஜயா அவர்கட்கு ,

உங்களின் தமிழறிவில் கால்பங்கு கூடக் கிடையாத இந்த ஈழ மண்னில் வாழும் கடைத் தமிழனின் கனிவான வணக்கங்கள்.

மேடைதோறும் முழங்கி மேகக் கூட்டத்தையே கலக்கி மழையாகப் பொழிய வைத்த மாபெரும் கவிஞரல்லவோ தாங்கள்.

தமிழ் தான் என் மூச்சு , தமிழ் தான் என் பேச்சு என்று மூச்சுக்குக் மூச்சு கொட்டித் தீர்த்து எம் தானைத் தலைவர் , தனிப்பெரும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் வாழும் போதே மாமனிதர் பட்டம் பெற்ற மாண்புக்குரியவர் அல்லவா தாங்கள்.

ஜயா, உங்களுக்கு இக்கடிதத்தை எழுதத் தூண்டியது அண்மையில் நான் இணையத்தளத்தில் கண்ட உங்கள் சீற்றம் மிகு பேச்சுத்தான்.

என்னே அழகுத் தமிழ் , எத்தகைய எதுகை மோனைகள் அத்தனையையும் ஜயகோ ஒருவரைத் திட்டித் தீர்ப்பதற்குப் பயன் படுத்தி விட்வீர்களே ஜயா?

கடந்த முப்பதுவருடங்களுக்கு மேலாக அதுவும் நான் பிறப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்னிருந்தே போராட்டம் கண்ட எங்கள் இனம் அதன் தலைவிதியைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பொழுதினிலே அவர்களைத் தாலாட்டிக் கொஞ்சம் மகிழ்விக்க வேண்டிய உங்கள் இனிய தமிழ் இத்தனை வீணாகப் போய்விட்டதே எனும் ஏக்கம் என் நெஞ்சை வாட்டுகிறது ஜயா.

இதோ தமிழீழம் ! அதோ தமிழீழம் என 25 அகவைகளுக்கு மேலாக மயாஜாலம் காட்டி விட்டு அவரையே நம்பி இருந்த மக்களை நம்பிக்கை எனும் மலையுச்சி வரை அழைத்துச் சென்று அங்கிருந்து உயிர் பிழைக்க முடியாதவாறு தள்ளி விழுத்தி மாய்த்த தானைத் தலைவரிடம் பதில் கேட்க இயலாது ஏனெனில் அவரும் அந்த எமலோகம் ஏகி விட்டார்.

ஓ !

நீங்களும் அவர் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று எஞ்சியிருக்கும் மக்களை மிச்சமின்றிப் பலி கொடுக்க எத்தனிக்கும் கும்பலில் ஒருவரல்லவா ? மறந்து விட்டேன் ஜயா !

பாவம் உயிரோடிருக்கும் உங்களை மாமனிதனாக்கி கெளரவித்த அந்தத் தானைத் தலைவனின் மறைவிற்கு உங்கள் வசமிருந்த தங்கத் தமிழால் ஒரு அஞ்சலிக் கவி கூட தரமுடியாதவாறு உங்கள் பொய்மைக் குழப்பம் உங்கள் கைகளுக்கு விலங்கிட்டு விட்டதல்லவா ?
சரி அதுதான் போகட்டும் அந்த அரும் பெரும் தலைவனுக்கு உங்கள் கைகளால் அஞ்சலிக் கவிதை பெறும் அருகதை இல்லை என்றே எடுத்துக் கொள்கிறேன்.

" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா " என்று உங்கள் தமிழ்த் திறனால் உசுப்பேறிய வாலிபர்கள் தங்கள் நிமிர்த்தப்பட்ட தலைகளை இலங்கை இராணுவத்திடமும், மேதகு தலைவரிடமும் பரிதவிக்க பறி கொடுத்துக் கொண்டிருக்க, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரில் 30 வருடங்களாக உங்கள் தலையைத் தப்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒரு உயர் கவிஞன் அல்லவா தாங்கள் ?

அது மட்டுமா ? உங்களைப் போன்ற தமிழ் வெறியேற்றும் கூட்டத்தினரால் தம் நிலை மறந்து யாரோ பெற்ற பிள்ளைகள் தம்முயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்க உங்கள் வாரிசினை வெளிநாட்டில் நிம்மதியான வாழ்வை அனுபவிக்க அனுப்பி வைத்த மாமனிதரல்லவா ஜாயா நீங்கள் ?

யார் செய்த புண்ணியமோ மாபெரும் பேரழிவுக்குப் பின்னால் புயலுக்குப் பின்னால் வரும் அமைதியைப் போல ஈழ மண்ணில் வாழும் எமக்கு ஒரு சிறிய ஒளிக்கீற்ருத் தெரிகிறது போல ஒரு எண்ணம் தோன்றும் போது பாதுகாப்பான கவசத்திலிருந்து கொண்டு அவ்வொளிக்கீற்றையும் அடைக்க ஒரு ஓலையைத் தேடுகிறீர்களே ஜயா? இது நியாயமா?

புலி வாலைப் பிடித்துக் கொண்டு அதை விடவும் முடியாமல் அதில் சவாரி செய்யவும் முடியாமல் தவிக்கும் ஒருவனைப் போல தவித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொஞ்சம் அறிவு கொண்டதே எனும் வகையில் நடந்து கொண்டது.

எமது நேச நாடான இந்தியா , தமது ஒரு ஒப்பற்ற தலைவனை மேதகு தலைவரின் அரசியல் சாணக்கியம் எனும் பெயரில் எடுத்த அரசியல் வங்குரோத்து நடவடிக்கையால் பலி கொடுத்தும் கூட தகுந்த அரசியல் ஆலோசனைகளின் மூலம் ஒரு தேர்தலை வடமகாணத்தில் நடத்தி முடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி வடமகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இதுவரை தன்மீது எதுவித அரசியல் சாயமும் பூசாத முன்னால் பிரதம நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்களை தெரிவு செய்யும் படியான வகையில் கூட்டமைப்பிற்கு அறிவுறுத்தியிருந்தது.

சிறிய அளவிலான ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்ட எம் ஈழத் தமிழர்களின் வாழ்வில் மீண்டும் சூறாவளியைத் தோற்றுவிக்க தாங்களும், தங்களைச் சார்ந்தவர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குவது எமது உள்ளத்தை ரணமாக்குகிறது ஜயா.

நேற்றுக் கொழும்பில் விளைந்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைத்தவர் என்று உங்களால் வருணிக்கப்பட்ட விக்னேஸ்வரன் ஈழம் எனும் நாட்டிற்குள் தானே வாழ்ந்திருக்கிறார். நாட்டில் நடக்கும் போரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் வேறு நாடு ஒன்றிலும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளவில்லையே ! ஜயா.

தந்தை செல்வா , ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்ற நீங்கள் பின்பற்றி வந்த தலைவர்கள் தமது தளமாக கொழும்பை வைத்து செயற்பட்ட காலங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? முப்பது வயது கூட நிரம்பாத எனக்குத் தெரிந்த வரலாறு தமிழீழம் எனும் கொள்கையில் விதையாக விழுந்து விருட்சமாக் வளர்ந்து நிற்கும் உங்களுக்கு தெரியாமலிருக்கும் என்பது கேலிக்கூத்தாகாதா ?

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போராட்டம் எனும் பெயரில் சட்ட சீர்குலைவுகளுக்கள்ளாகி அடையாளத்தை இழந்து தவித்த எம் மக்கள் சிறிதளவுவாவது ஒரு நிலையான் வாழ்விற்குத் திரும்புவதை எதிர்ப்பதில் நீங்கள் காட்டும் தீவிரம் என்னைப் போன்றவர்களைத் திகைக்க வைக்கிறது.

எம்மண்னிலே வந்து சிறிது காலம் வாழ்ந்து பார்த்தீர்களானால் எம் இன்னல்களின் ஆழம் உங்களுப் புரியும். ஒரு கட்டுபாடற்ற கலாச்சாரச் சீர்குலைவ்வுக்குள்ளாகும் என்னைப் போன்ற இளளைஞர், யுவதிகளின் அவலம் புரியும்.

எதிர்ப்பரசியலினால் 30 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க முடியவில்லை இணக்க அரசியலுக்கு ஏன் சிறிது கால அவகாசம் கொடுக்கத் தயங்குகிறீர்கள் ?

ஜயா , ஒரு குழந்தை மிறந்து மண்னில் தவழும் முன்பாகவே அதற்கு நடக்க வராது, பேச வராது என்றெல்லாம் எதிர்மறையான கருத்துகளை வைத்தால் எப்படி அக்குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும் ?

அதைப் போன்றல்லவா ? இருக்கிறது உங்கள் வடமகாண சபையின் முதல்வர் மீதான காட்டம்.

விதவைப் பெண்களின் தவிப்பு ஒருபுறம் , சீர்குலைந்த கல்விக் கட்டமைப்பினால் எதிர்காலத்தைத் தொலைத்த என் போன்றவர்களின் அவலம் ஒருபுறம், நாகரீகம் என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் இளைஞர், யுவதிகள் இன்னொரு புறம். இவர்களின் வாழ்வைச் சீரமைக்க ஒரு சீரான கட்டமைப்புத் தேவை என்பதை உணராமல் உங்களைப் போன்றோர் சுயநலத்தை முன்வைத்து எமது மண்னின் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கையை இனியாவது நிறுத்துங்கள்.

புலம் பெயர்ந்தோரில் சிலர் மேதகுவின் மேதமையைச் சொல்லி தாம் முடக்கி வைத்திருக்கும் பணத்தின் எச்சங்களை உங்களைப் போன்றோரை நோக்கி வீசுவதனால் நீங்கள் போடும் இந்தக் காட்டுக்கூச்சல் உங்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தரப்போவது இல்லை.
மாறாக எம் மண்ணில் எஞ்சியிருக்கும் என் போன்ற எச்ச சொச்சங்களாகிய தமிழர்களின் வாழ்வை முற்றாக அழிக்கும் செயலைத் தான் நீங்கள் அரங்கேற்றப் போகிறீர்கள்.

ஜயா உங்களைப் போன்றோரிடம் வெளிநாடு செல்ல வசதியில்லாமல் உள்நாட்டில் முடங்கி வாழ்க்கை கொஞ்சம் அமைதியடையாதா என ஏங்கும் என் போன்றோர் கேட்பதெல்லாம் சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பதுவே.

கிடைத்த இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஓரளவு எம்மை நாமே பராமரிக்கும் வழிமுறைகள் கிடைக்குமா என்று ஒன்றுபட்ட நாட்டினுள் ஒரு நடுநிலையான தீர்வை எட்டுவதற்கு நீங்கள் வாழும் பாதுகாப்பான பாரத பூமி போன்ற நேசநாடுகளுக்கு சந்தர்ப்பம் அளியுங்கள் என்பதுவே.

உங்களது உடல்நலக் குறைவைப் பற்றி அறிந்திருக்கிறேன். தங்கத் தமிழ்க் கவி உங்களினது உடல்நலனிற்காக எல்லம் வல்ல அந்தாஅண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஈழத்திலிருந்து
வாழத் துடிக்கும் ஈழத் தமிழன்
நல்லையா குலத்துங்க்கன்

0 comments

தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராவதற்கு தயாராகின்றார் மங்கள!

எதிர்வரவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு மங்கள சமரவீர தயாராகவிருப்பதாக அக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிடுகிறார்.

முதலமைச்சர் வேட்பாளராக நிற்குமாறு கட்சியிலிருந்து அறிவித்தல் வந்தால் பாராளுமன்றத்திலிருந்து விலகி, மாகாண சபைக்காக போட்டியிடுவதற்கு தான் தயாராகவிருப்பதாகவும், அது சற்று அவதானம்மிக்க செயலாகவிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நன்மையைக் கருத்திற்கொண்டு தீர்மானத்திற்கு வரவும் தான் தயார் என்றும், அதற்கு ஒருபோதும் இணங்காமல் இருக்க மாட்டேன் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், அதன் பொருட்டு கட்சி உயர்மட்டத்திலிருந்தும், பிரதேச மட்டத்திலிருந்தும் இதுவரை தனக்கு அவ்வாறானதொரு கடிதம் வரவில்லை எனவும் பாராளமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

மேற்கு, தெற்கு, ஊவா மாகாணங்களுக்கான தேர்தலில் தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் முதலமைச்சருக்கான வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டால் கட்டாயம் அந்த மாகாண சபைகள் மூன்றும் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றிகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)
0 comments

இத்தாலியில் படகு மூழ்கியதில் 62 பேர் உயிரிழப்பு மேலும் பலரை காணவில்லை!

தெற்கு இத்தாலி கடற்பரப்புக்கு அப்பால் சட்டவிரோத குடிவரவாளர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த படகு ஒன்று இன்று மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதுடன் இவர்களில் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் 140 இற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் படகில் 500 பேர் வரையில் இருந்துள்ளதாகவும் நம்பப்படுவதுடன் உயிரிழந்தவர்களில் ஒரு சிறுபிள்ளையும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் அடங்குவதுடன் படகு விபத்திற்குள்ளானபோது படகிலிருந்த பயணிகள் கடலினுள் பாய்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் இந்தப் படகு மூழ்குவதற்கு முன்னராக படகு தீ பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments

அமெரிக்காவில் 14வயது மாணவியை பலாத்காரம் செய்த சீக்கியர் இந்தியாவில் கைது !

அமெரிக்காவில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்த சீக்கியரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் அமித் சிங். அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மார்ச்11 ம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 14 வயது மாணவி ஒருவரை நைசாகப் பேசி, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்துவிட்டார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொலிசில் புகார் செய்து, வழக்கு பதிவானது. ஆனால் சம்பவம் நடந்த 5 நாளுக்குப்பின் அமித் சிங், இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு அமித் சிங்கை இந்தியாவில் இருந்து நாடு கடத்திக்கொண்டு செல்ல அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அமெரிக்க பொலிசார் இந்தியா வந்து அமித் சிங்கை நியூயார்க் அழைத்துச் சென்றனர். அவர் உடனடியாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அமித் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

(இ.மி)
0 comments

பணத்திற்கு பதில் பாலியல்; மட்டக்களப்பில் அரங்கேறும் சம்பவங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுய தொழிலுக்காக நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள முற்படுவதாக உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் ஓன்றியமான இணையம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.

சுய தொழிலுக்காக நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனை வழங்கிவிட்டு கடனை செலுத்த தாமதிக்கும் பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகள் சிலர் பாலியல் ரீதியாக கடனுக்கு பதிலை தருமாறு கோருவதாக இணையத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள பெண்கள் அமைப்புகளினால் இது தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இணையத்தின் தலைவரான வி.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியேற்றப் பிரதேசங்களிலும் பின் தங்கிய கிராமங்களிலுமே இந்த நிலை காணப்படுவதாகவும் போருக்கு பின்னரே மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்களும் அதிகரித்துள்ளதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன.

தமது இணையத்தில் அங்கத்துவம் பெறும் 17 அமைப்புகளுக்கு மட்டும் தங்களால் 2 கோடி ரூபாய் நுண்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், குறித்த நிதி நிறுவனங்களினால் ஆகக்குறைந்தது 60 கோடி ருபாய் வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடடார்.

இவ்வாறான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பெண்களுக்கு சுய தொழிலுக்காக கடன்களை அதிக வீத வட்டிக்கு வழங்கி சில அதிகாரிகளினால் கொடுக்கப்படும் நெருக்கடிகளினால் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இவரது இந்த புகார்கள் குறித்து அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்ற கூட்டுவதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் தான் தொடர்பு கொண்டுள்ளதாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் பதில் அளித்தார்.

(பிபிசி)
0 comments

திஸ்ஸவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்றார் ரணில்!

குண்டசாலை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விலகிக் கொள்வது பற்றிக் சமர்ப்பித்துள்ள இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாத்திலக்க இதுபற்றிக் குறிப்பிடும்போது, தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்திற்கு வெகுவிரைவில் அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தாலும், திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராகவும், பொதுச் செயலாளராகவும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பார் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)
0 comments

அதிவேகப் படகில் ராமேஸ்வரம் வந்த ஈழத் தமிழரால் பரபரப்பு!

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல்வழியே ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அண்மையில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த கடும் பாதுகாப்பை மீறி ராமேஸ்வரம் அருகே அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அதிவேகப் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே மர்ம நபர் ஒருவர் சென்றிறங்கியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அங்கு பதுங்கியிருந்த இலங்கை மன்னார் - பேசாளையைச் சேர்ந்த செல்லகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் திருச்சியில் தங்கியிருப்பதாகவும் அடிக்கடி இலங்கைக்கு கடல்வழியே படகில் சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார் இதனையடுத்து கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்படைக்கும் கூட தெரியாமல் அதிவேகப் படகு ஊடுருவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
0 comments

கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றமும் சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் ஏற்பாடு செய்த சிறுவர் தின வைபவங்கள் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.சாலிஹ் ,சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரி திருமதி ஓ.கே.சரிபா ஆகியோரின் தலைமைகளில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அத்தோடு ஸ்ரீ சுபத்திரா ராமய முன்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தலைமையில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபைக்கு ஊர்வலமாக வந்த சிறார்களை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வரவேற்று அம்மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைத்தார்.

மேற் குறித்த இரு வைபவங்களிலும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறுவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சமுர்த்தி உதவி பெறும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் பாதணிகள் வழங்கப்பட்டதுடன் வறிய மயணவர்களுக்கான சிசு திரிய புலமைப் பரிசு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வும் அங்கு இடம் பெற்றது.

நிகழ்வுகளில் சமுர்த்தி திணைக்களத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கல்முனை லயன்ஸ் கழகத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்களும் சிறார்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

(யு.எம்.இஸ்ஹாக்)



























0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tesxxx - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger